நாய்கடியால் உயிர் இழந்த கோழிகள் மனித உயிர்கள் போகும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? - சிபிஐ கோரிக்கை

நாய்கடியால் உயிர் இழந்த கோழிகள் மனித உயிர்கள் போகும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா? - சிபிஐ கோரிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் இருப்பத்திஏழு வார்டுகள் உள்ளன. இவ்வார்டுகளில் உள்ள தெருக்களில் நாய்கள் அதிகளவில் உலா வருகிறது. நாய்களிடம் இருந்து பொது மக்களை காக்கா கோரி சமூக நல அமைப்புகள் அணைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலை கூறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் செவலூரில் பேராசிரியர் ஒரு நாய்கடியால் உயிர் இழந்தார். அன்றை தினம் நகராட்சி ஆணையர் பொறுப்பு அலுவரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்தது அவர் சுகதார அலுவலரிடம் இவை கூறித்து பேசி நடவடிக்கை எடுக்கபடும் என்றார். நாய்களை அப்புறப்படுத்த வடமாநிலத்தில் உள்ள விலங்குகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அணுமதி பெற்ற பின்னர் தான் எதும் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

நாய்கள் இனபெருக்கத்தை தடுக்க கருத்தடை அலுவலத்தை நகராட்சி நிர்வாகம் தொங்கியது. பின்னர் தொடங்க நாளுக்கு பின் தொடர் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. தற்போது நாய்கள் முன்னை விட அதிக அளவில் உள்ளதால் வீடுகளில் வாளர்க்கப்படும் கோழிகளை கடித்து வருகிறது. தினம் பத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உயிர் இழந்து வருகிறது. கோழிகளை கடித்து பழகிய நாய்கள் மணிதர்களை கடித்து கொல்லும் முன் மணப்பாறை நகராட்சி பகுதிகளில் உள்ள நாய்களின் இனபெருக்கத்தை தடுத்து நாய்களை பிடித்து வனப்பகுதியில் விடவும், விலங்குகள் பாதுகாப்பாளர்களிடம் ஒப்படைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு சார்பில் கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளனர்.