வடிகால் வசதி இல்லாமல் திருச்சி கொட்டப்பட்டு குளம் நிரம்பியதால் மக்கள் கடும் அவதி

வடிகால் வசதி இல்லாமல் திருச்சி கொட்டப்பட்டு குளம் நிரம்பியதால் மக்கள் கடும் அவதி

திருச்சி மாநகராட்சி விமான நிலையம் அருகிலுள்ள கொட்டப்பட்டு குளம் நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளம் வடிகால் வசதி இல்லாமல் தண்ணீர் நிரம்பி நிற்கின்றன. இந்த குளத்துக்கு ஏர்போர்ட் கே.கே.நகர், காஜாமலையின் ஒரு பகுதியிருந்து மழை நீர் வரும் குளம் நிரம்பியதும் கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, வழியாக பொன்னேரிபுரம் மாவடிக்குளம் செல்லும், தற்பொழுது இதற்கு வடிக்கால் வழி இல்லாமல் ஜே.கே.நகர், ஆர்.எஸ்.புரம், அண்ணா கோளரங்கம் போன்ற இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஜே.கே.நகரில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து விட்டது.

இதனால் மாவட்ட நிர்வாகம் மோட்டார் வைத்து குளத்திலிருந்து தண்ணீர் உறிஞ்சி ஆவின் கழிவு நீர் செல்லும் வழியாக ஜெயில் கார்னர், சுப்ரமணியபுரம் சாக்கடையில் கலக்க செய்து வருகிறார்கள். மழைநீர் சேமிக்க வழியுறுத்தி ஒரு புறம் பிரச்சாரத்திற்கு செலவு, மழை நீரை சாக்கடைக்கு அனுப்புவதற்கு ஒரு செலவு, கோடையில் தண்ணீர் கிடைக்காமல் லாரியில் தண்ணீர் வழங்க ஒரு செலவு. மழை நீரை சேமியுங்கள், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள் என்று பொது மக்களிடம் சொல்லும் மாவட்டம் நிர்வாகம்.

தொலைநோக்கு பார்வை இல்லாமல் பொதுமக்களை சிரமபடுத்துகிறது. எனவே திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட குளங்களில் கொட்டப்பட்டு ஆவின் குளம், மாவடிக்குளம் போன்ற குளங்களை தூர் வாரி, கரைகளை அகலப்படுத்தி, வடிக்கால்களை அமைத்து, கரைகளின் ஒரங்களில் மரங்களை அமைத்து தூய்மையாக பரிமரிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn