திருச்சியில் யானைகள் தின கொண்டாட்டம்
தமிழ்நாடு வனத்துறை திருச்சி வனக்கோட்டம் எம்.ஆர்.பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 8 யானைகள் தனியார் மற்றும் கோவில் யானைகள் நீதிமன்ற உத்தரவின்படி நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சம்பந்தப்பட்ட யானைகளுக்கு தேவையான உணவுகள் வனத்துறை மூலம் வழங்கப்படும் மற்றும் யானை பாகன்கள் மற்றும் காவடிகள் மூலம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று உலக யானைகள் தினத்தை முன்னிட்டு எம்.ஆர் பாளையத்தில் யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. அங்கு உள்ள யானைகளுக்கு மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் பல வகையான பழங்கள் வழங்கப்பட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட வன அலுவலர் மற்றும் சம்பத்குமார் உதவி இயக்குனர் மற்றும் உதவி வன பாதுகாவலர் மற்றும் சுப்பிரமணியன் வனசரக அலுவலர் மற்றும் களப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO