பைனான்ஸியர் வீட்டில் ரெய்டு - கோடிக்கணக்கில் ஆவணங்கள் பறிமுதல்

பைனான்ஸியர் வீட்டில் ரெய்டு -  கோடிக்கணக்கில் ஆவணங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் லால்குடி திருவள்ளுவர் நகரில் வசிக்கும் பைனான்ஸ் விசுவநாதன் மீது அதே பகுதியைச் சேர்ந்த விவசாயியும், லால்குடி நகராட்சி திமுக கவுன்சிலருமான செந்தில்குமார் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமாரிடம் புகார்.

எனது நிலத்தின் பத்திரத்தை அடமானமாக வைத்து ரூ. 1 கோடியே 20 லட்சம் விசுவாநாதனிடம் மாத வட்டிக்கு பணம் பெற்றேன். தற்போது அசலுடன் வட்டியும் சேர்த்து ரூ. 2 கோடியே 20 லட்சம் கொடுத்தால் தான் நிலத்தின் பத்திரத்தினை கொடுக்க முடியுமென மிரட்டுவதாக புகார் அளித்ததின் பேரில் திருச்சி மாவட்ட காவல்துறை ஏடிஎஸ்பி குந்தலிங்கம் தலைமையில் 2 டிஎஸ்பி, 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் பைனான்ஸ் விசுவநாதன் வீட்டில் ஆய்வு நடத்தினர்

ஆய்வின் போது நிலத்தின் பத்திரங்களை வைத்து வட்டிக்கு பணம் பெற்றவர்களின் நிலத்தின் ஏராளமான பத்திரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் பைனான்ஸ் விசுவநாதன், அவரது மகன்கள் வினோத், விவேக் ஆகியோர் மீது வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தும், பைனான்ஸ்  விசுவநாதன் ஊழியர்கள் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO