கொக்கு, கவுதாரியை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய நரிக்குறவர் இருவர் சிறையிலடைப்பு
திருச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளை வேட்டையாடினால் கைது செய்யப்பட்டு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருச்சி வனச்சரகத்தில் உட்பட்ட பகுதிகளில் உடும்பு, கொக்கு மற்றும் கவுதாரி போறவற்றை நாட்டு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய நரிக்குறவர் ராஜா மற்றும் குமரேசன் ஆகிய இருவரையும் திருச்சி வனத்துறை அதிகாரிகள் கைது செய்து அவர்கள் வேட்டையாடிய கொக்கு, கௌதாரி, நாட்டு துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவரையும் முசிறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையெடுத்து ராஜா மற்றும் குமரேசன் லால்குடி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn