திருச்சியில் மருத்துவ முகாம்

திருச்சியில் மருத்துவ முகாம்

முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படியும், மக்கள் நல்வாழ்வுத்துறை உதவியுடன் நமது 63 வது வார்டில் கலைஞரின் வருமுன் காப்போம்

சிறப்பு மருத்துவ முகாம் (18.11.2023) ,இன்று சனிக்கிழமை ஆர்ச்சர்ட் பள்ளி வளாகத்தில் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை திருச்சி தெற்கு மாவட்ட மாநகர செயலாளர், மண்டலம் 3ன் தலைவர். மதிவாணன் தலைமையில், கலைஞர் நகர் பகுதி செயலாளர் G.மணிவேல் முன்னிலையில், பொற்கொடி ஜெகன்மோகன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

 இச்சிறப்பு முகாமில் பொது நலன், மகளிர் நலன் , மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலன், சித்த மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், தோல் மருத்துவம், மன நலம்,  யோகா மற்றும் இயற்கை மருத்துவம், குடும்ப நலம், முடக்குவாத நீக்கம், இருதய நலன் போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் பொதுமக்களுக்காக முழு உடல் பரிசோதனையும் ஏற்பாடு செய்யப்பட்டது.  நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்  இந்த சிறப்பு முகாமில்  பங்கு கொண்டுபயன் அடைந்தனர். வாழ்க திராவிடம்! வாழ்க நற்றமிழ்!! மண்வளம், நீர்வளம் காப்போம்!
மனித நேயம் வளர்ப்போம்!! குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்ப்போம்! உடல்நலம், மனநலம் பேணிக் காப்போம்!

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision