திருச்சியில் 2வது முறையாக எம்ஜிஆர் சிலை உடைப்பு

Nov 19, 2023 - 08:29
Nov 19, 2023 - 21:50
 1229
திருச்சியில் 2வது முறையாக எம்ஜிஆர் சிலை உடைப்பு

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடியில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை கடந்த மாதம் மர்ம நபர்கள் சேதப்படுத்தியிருந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிறுகனூர் போலீசார் சிலையில் குரங்கு அமர்ந்து உடைந்ததாக வழக்கை சுமூகமாக முடித்தனர்.

இதனைத்தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் சேதமடைந்த எம்.ஜி.ஆர் சிலையை அப்போது சீரமைத்தனர். இந்நிலையில் அதே சிலையை மர்ம நபர்கள் மீண்டும் இரண்டாவது முறையாக சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேதமடைந்த சிலையை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அரசியல் சர்ச்சையை கிளப்பும் வகையில் இதுபோன்று மர்ம நபர்கள் யாரோ தொடர்ந்து இரண்டாவது முறையாக சிலையை சேதப்படுத்தியிருக்கலாம். எனவே உடனடியாக இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சிலையை சேதப்படுத்திய நபரை கைது செய்ய சிறுகனூர் போலீசாருக்கு உத்தரவிட்டு சென்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision