திருச்சியில் தண்டவாளத்தில் டயர் வைத்த மூன்று பேர் கைது- எஸ்பி பேட்டி

திருச்சியில் தண்டவாளத்தில் டயர் வைத்த மூன்று பேர் கைது- எஸ்பி பேட்டி

 கன்னியாகுமரியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட டயர்கள் மீது மோதி ரயில் இன்ஜின் பெட்டியில் ஒயர்கள் துண்டிக்கப்பட்டு நான்கு பெட்டிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது.02.06.2023ம் தேதி  அன்று சம்பவம் நடைபெற்றது.

இது குறித்து திருச்சி ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படை, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் எட்டு தனி படைகள் அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்ணாவி பிரபாகரன், கார்த்திக் ,வெங்கடேஷ் மூன்று பேர் வாளாடி பகுதியை சேர்ந்தவர்கள். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காமல் விரத்தி அடைந்த மூவரும் தண்டவாளத்தில் டயர் வைத்ததாக ரயில்வே போலீசார் விசாரணையில் தெரியலந்துள்ளது.

உள்ளூர் பிரச்னைக்காக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.சதி மற்றும் நாச வேலையில் ஈடுபட்டதால்இந்திய ரயில்வே சட்டத்தின் 150 (i)(a)கீழ் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தண்டவாளத்தில் தீய செயல்கள் செய்வது, பொருட்களை வைப்பது , சதி செயலில் யாரும் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மண்டல கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுத்து 764 கிலோ கஞ்சா கைப்பற்றி உள்ளோம்.கஞ்சா தீவிர வேட்டை தொடரும் என கூறினார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn