வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பிற்கான பயிற்சி
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக (ICAR) வேளாண் அறிவியல் மையம் (KVK), புழுதேரி, கரூர் மூலம் ஜீன் மாதம் 29 ஆம் தேதி வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் "வியாபார ரீதியில் தேனீ வளர்ப்பிற்கான " ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் துவக்க உரையில் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர். முனைவர்.ஜெ.திரவியம் இன்றைய விவசாயித்தில் தேனீக்களின் முக்கியத்துவத்தினை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் தேனீ வளர்ப்பின் முக்கிய அம்சங்கள்தேனீ பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் தேனீக்களின். மூலம் விவசாய மற்றும் தோட்டக்கலை பயர்களில் மகசூல் அதிகரித்தல், இட தேர்வு கோடைக்கால பராமரிப்பு, பூச்சி நோய் நிர்வாகம், சந்தைப்படுத்துதல் மற்றும் தேனீக்களை கையாளும் முறைபற்றிய செயல் முறைவிளக்கம் குறித்து வேளாண் அறிவியல் மைய பண்ணை மேலாளர் நா.ஸ்ரீதர் விளக்க உரை அளித்தார்.
மேலும் மதிப்புக்கூட்டுதல் முறைபற்றி வேளாண் அறிவியல் மனையியல் தொழில்நுட்ப வல்லுனர் முனைவர் இல மாலதி விளக்க உரை அளித்தார்.
இப்பயிற்சியிக்கு கரூர். திருச்சி, ஈரோடு.
புதுக்கோட்டை, தேனீ. மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 26 விவசாயிகள் கலந்துகொண்டனர்.
பயிற்சியின் முடிவில் இப்பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிற்சி கையேடு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..