திருச்சி மாநகரில் 4 வார்டுகளுக்கு ஒரு பள்ளியில் தடுப்பூசி போட திட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி

திருச்சி மாநகரில் 4 வார்டுகளுக்கு ஒரு பள்ளியில் தடுப்பூசி போட திட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதனைப் பார்வையிட்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்திகளை சந்தித்தார். கடந்த 10 நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 22476 பேர் தடுப்பூசி போட்டு சாதனை செய்துள்ளனர். இதுவரை 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் திருச்சி மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 

திருச்சி மாவட்டத்தில் 2020 வருட கணகெடுப்பின்படி மொத்தம் 30 லட்சம் பேர் வசிக்கின்றனர். அதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 8.5 லட்சம் பேர் மீதம் 21 லட்சம் பேர் தற்பொழுது 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளனர். மூன்றாவது அலை கட்டுப்படுத்துவதற்கு ஆக்சிஜன், படுக்கை வசதி கோடிக்கணக்கான ரூபாய் மருத்துவ வசதி அரசு செலவு செய்து வைப்பதை தாண்டி முககவசம் அணிந்து தனிமனித இடைவெளியுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு கோவிட்லிருந்து பொதுமக்கள் தங்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் காந்தி மார்க்கெட் வருகிற 20-ஆம் தேதி இரவு முதல் மொத்த வியாபாரம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்காக வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை காந்தி மார்க்கெட்டில் 2360 பேர் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். மீதம் 500க்கும் மேற்பட்டோர் மட்டுமே தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

தற்போது தடுப்பூசி செலுத்தாதவர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். விரைவில் அடுத்த கட்டமாக திருச்சி மாவட்டத்தில் முக்கியமாக மாநகரில் நான்கு வார்டுகளுக்கு பள்ளிகளில் தடுப்பூசி முகாம்  நடத்தப்படும். அதனால் விரைவாகவும் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு குறிப்பிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF