திருச்சியில் ஐந்தாவது போலீஸ் கமிஷன் கூட்டம் -போதை பொருளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் ஐந்தாவது போலீஸ் கமிஷன் கூட்டம் நடைபெற்றது. காவல் துறையினருக்கான குறைகளை நிவா்த்தி செய்தல், காவல் துறையினரின் செயல்பாடுகளை மேம்படுத்துவது, பொதுமக்கள்- காவல் துறை நட்புறவோடு இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவல் துறையினருக்கான தேவைகளை அறிந்து அவா்களின் மனுக்களுக்கு உயரதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆணையத்தின் சாா்பில் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த குழுவில் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே அலாவுதீன், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே ராதாகிருஷ்ணன், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், மத்திய மண்டலம் முழுவதும் உள்ள கலெக்டர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார்,மற்றும் மத்திய மாவட்ட( தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை பெரம்பலூர் அரியலூர் கரூர் புதுக்கோட்டை) ஆட்சியர்கள் , காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்
அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision