ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உள்ளே ஜால்ரா அடித்து போராட்டம்
திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை சீரமைக்க வலியுறுத்தியும் ஸ்ரீ ராமானுஜ திருமால் அடியார்கள் குலாம் சார்பில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருமால் அடியார்கள் குழாமை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ளே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஸ்ரீரங்கம் கோவிலில் ரங்கா ரங்கா கோபுரம் முன்பு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர், திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஜால்ரா வாசித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை உள்ளே விட கோவில் நிர்வாகத்தினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பற்றி தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision