முனைவர் நல்லுசாமி அண்ணாவி தடகள அகாடமி சார்பில் தடகள விளையாட்டு போட்டிகள்

முனைவர் நல்லுசாமி அண்ணாவி தடகள அகாடமி சார்பில் தடகள விளையாட்டு போட்டிகள்

திருச்சி ரயில் ஜங்ஷன் கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் 10 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் முனைவர் நல்லுசாமி அண்ணாவி தடகள அகாடமி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் 6,8,10,12,14 மற்றும் 16 வயது உள்ளவர்களுக்கான 60, 80, 100, 300, 400, 600, 800 மீட்டர் ஆகிய பிரிவுகளில் ஒட்டபந்தயம், நீளம் தாண்டுதல், தொடர் ஒட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் 1000திற்க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இரண்டு நாள் நடைபெற்ற இப்போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டியில் மாணவர்களுக்கான சீனியர் பிரிவில் என். வி அகடாமியை சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்கள் முதல் இடத்தையும், மாணவிகளுக்கான பிரிவில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகடாமியை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகள் முதல் இடத்தையும்,

ஜூனியர் பிரிவில் மாணவர்களுக்கான பிரிவில் ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் தடகள விளையாட்டு வீரர்கள் முதல் இடத்தையும், மாணவிகள் பிரிவில் செயிண்ட் ஜேம்ஸ் பள்ளியை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகள் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர். மாலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தொழில் அதிபர் ஜெரோம் ஆரோக்கியராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ஆ. சுப்ரமணி, சர்வதேச தடகள விளையாட்டு வீரரும் தேசிய பயிற்ச்சியாளருமான நல்லுசாமி அண்ணாவி, தேசிய போல் வால்ட் விளையாட்டு வீரரும் கல்லுக்குழி ரயில்வே மைதான கண்கானிப்பாளருமான தமிழரசன்,

கால்பந்து விளையாட்டு வீரர் சிவக்குமார், தேசிய தடகள விளையாட்டு வீரரும் ரயில் ஊழியருமான கமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கவோரி ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிர்வாகியும் தடகள பயிற்ச்சியாளரும் அஞ்சல் துறை ஊழியருமான முனியாண்டி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் பாபு மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision