திருச்சி காவிரி ஆற்றில் மண்ணில் புதைந்து விவசாயிகள் போராட்டம்
காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும், விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
கடந்த 10 நாட்களாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 11-வது நாளான இன்று விவசாயிகள் திடீரென்று காவிரி ஆற்றில் உள்ளே இறங்கி போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த கோட்டை போலீசார் காவிரி ஆற்றில் உள்ளே இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு காவிரி ஆற்றில் கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் முன் அனுமதியின்றி காவிரி ஆற்றினுள் இறங்கிப் போராட்டம் நடத்திய விவசாயிகள் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
காவிரி ஆற்றில் உள்ள இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இதை வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகள் காவிரி பாலத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision