ஸ்ரீரங்கத்தில் அதிமுக  வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு

ஸ்ரீரங்கத்தில் அதிமுக  வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
ஸ்ரீரங்கத்தில் அதிமுக 
வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தேர்தல் பரப்பரையை துவக்கினார்.ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு கு.ப.கிருஷணனுக்கு அதிமுக தொண்டர்கள்  உற்சாகமான வரவேற்பு அளித்தனர் .வெடி வெடித்து மாலை அணிவித்து ஸ்ரீரங்கத்திற்க்குள் வரவேற்றனர்.அதன்பின்னர் ராஜகோபுரம்  கீழே உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து  தேர்தல் பரப்புரையை துவங்கினார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன்
அடிமனை பிரச்சினைக்கு என்னிடம் தீர்வு உள்ளது ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்கள் முன்னிலையில் வாக்குறுதி அளித்தார்.
108 வைணவ தலங்களில் மிக முக்கியம் வாய்ந்த தலமாக இருக்கக்கூடிய ஸ்ரீரங்கத்திற்கு  அங்கீகாரம் மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.  நான் வெற்றி பெற்றவுடன் முதலாக செய்ய வேண்டிய பணி இந்த ஸ்ரீரங்கத்திற்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுப்பது தான் என்றார்.

அதேபோன்று ஸ்ரீரங்கத்தில் மிக முக்கியமாக பேசப்பட்டு வரும் அடிமனை பிரச்சனை இதனை சரி செய்வதற்கு என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. ஆனால் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் வரை சென்று அவர்கள் கோவில் சொத்து என்பதற்கான உத்தரவை பெற்றுள்ளனர். எனவே இது குறித்து நீதிமன்றத்தின் உதவியோடு ஒரு புதிய திட்டத்தை வைத்திருக்கிறேன். அந்த திட்டத்தின் மூலம் இந்த அடிமனை பிரச்சினை தீர்க்கப்படும் . ஏற்கனவே நான் அமைச்சராக இருந்த போது இதே போல் ஒரு பிரச்சினைய தீர்த்து வைத்துள்ளேன் . அடிமை பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கும் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்னை அணுகும் போது நேரடியாக அத்திட்டத்தை தெரிவிப்பேன்
என்று கூறினார்.

வியாபாரிகள் முன்வைத்த கோரிக்கையான நறுமண திரவம் தயாரிக்கக்கூடிய நிறுவனத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைத்து தருவதாக கூறி இருந்த நிலையில் அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.கள்ளிக்குடி மார்க்கெட் தொடர்பான பிரச்சினையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்றம் என்ன வழி காட்டுகிறதோ அதனைடிப்படையில் மார்க்கெட் செயல்படும் என்று தெரிவித்தார்.

இந்தத் தொகுதியில் ஏற்கனவே அமைச்சர் வளர்மதி வெற்றி பெற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவது எனக்கு மன மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இதற்கு நான் என்னுடைய தலைமைக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I