லால்குடி அருகே மோதலில் 14 போ் கைது - 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

லால்குடி அருகே மோதலில் 14 போ் கைது - 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

லால்குடி அருகே மோதலில் போலீஸாா் காயம் 14 போ் கைது செய்யபட்டுள்ளனர்.7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்துபட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த அன்பில் ஜங்கமராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆச்சிரமவள்ளி அம்மன்  கோயில் திருவிழா தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடந்த மறியலின் போலீஸார் மற்றும் பட்டியல் இன மக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது போலீஸாா் காயமடைந்தனா். இதுதொடா்பாக 14 போ் கைது செய்யப்பட்டனா்.

இக்கோயில் திருவிழாவை செவ்வாய்க்கிழமை ஒரு பிரிவினா் நடத்த முற்பட்டதால் ஆத்திரமடைந்த பட்டியல் இன மக்கள் தங்கள் பகுதிக்கும் சுவாமி வந்து சென்றால்தான் திருவிழா நடத்த வேண்டும் எனக் கூறி கோயில் முன் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்திய லால்குடி வருவாய் கோட்டாட்சியா் வைத்தியநாதன் நீதிமன்ற உத்தரவு பெற்றபின் திருவிழா நடத்தப்படுமெனக் கூறியதால் போராட்டத்தைக் கைவிட்டனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மற்றொரு தரப்பினா் மறியலில் ஈடுபட்டபோது போலீஸாருக்கும் பட்டியல் இன மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸாா் சிலா் காயமடைந்தனா். இதுதொடா்பாக பட்டியல் இன மக்கள் 14 பேரை லால்குடி போலீஸாா் கைது செய்தனா். அசம்பாவிதங்களைத் தவிா்க்க இப் பகுதியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜன் தலைமையில் 200- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

144 தடை உத்தரவு  இப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் லால்குடி வருவாய் கோட்டாட்சியா் வைத்தியநாதன் ஆச்சிரமவள்ளியம்மன் கோயிலில் வழிபடும் மக்கள் வசிக்கும் பகுதியான கீழன்பில், மங்கம்மாள்புரம், ஜங்கமராஜபுரம், குறிச்சி, பருத்திகால், கோட்டை மேடு, புறாமங்கலம் ஆகிய பகுதிகளில் மாா்ச்10 ம் தேதி முதல் 17 வரை 7 நாட்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளாா்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I