திருச்சியில் 2 நாட்கள் ஆகியும் நிலைக்கு வராத தேர்

திருச்சியில் 2 நாட்கள் ஆகியும் நிலைக்கு வராத தேர்

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி விசாலாட்சி உடனாயஞீலி வனேஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டம் நேற்று (03.05.2023) தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேரோட்ட பெருவிழா, நிகழாண்டு ஏப்.25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய உற்சவமான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் விசாலாட்சி உடனாய ஞீலிவனேஸ்வரர், வள்ளி, தெய்வானை உடனாய முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட் டோர் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மூன்று வீதிகளை தேர் சுற்றி வந்த நிலையில் மழை பெய்ததால், தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு நிலைக்கு கொண்டு வரப்படும் என கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் இன்று (04.05.2023) மீண்டும் தேரை மக்கள் வடம் பிடித்து இழுக்க முற்பட்டபோது மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் தேர் இரண்டாவது நாளாக பாதியிலேயே நின்று கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் தேரை இழுப்பதற்கு மக்கள் கூட்டம் குறைவாக இருப்பதால் தேரை நகற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn