சத்திரம் பேருந்து நிலையத்தில் சாக்கடை அடைப்பு எடுக்கும் பணி - வாகன ஓட்டிகள் சிரமம்!

சத்திரம் பேருந்து நிலையத்தில் சாக்கடை அடைப்பு எடுக்கும் பணி - வாகன ஓட்டிகள் சிரமம்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பெரியசாமி டவர் அருகில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் பணி நடைபெறுகிறது. 

Advertisement

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்கனவே சத்திரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் பேருந்து நிலையத்தை சுற்றி தான் தற்போது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றி உள்ள சாலைகளில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

 மேலும் இங்கு பாதாள சாக்கடைத் அடைப்பு எடுக்கும் பணியானது இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விடத்தில் இருசக்கர வாகனம் நிறுத்த சரியான இடம் இல்லை என்றும், இங்கு பணிபுரியும் அனைவரும் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து மிகவும் சிரமமாக உள்ளது மேலும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement