வெற்றிடத்தை நிரப்ப வாருங்கள் வரவேற்கும் விஜய் ரசிகர்கள் - நாளைய தமிழக முதல்வரே திருச்சியில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்ட்டர்!

வெற்றிடத்தை நிரப்ப வாருங்கள் வரவேற்கும் விஜய் ரசிகர்கள் - நாளைய தமிழக முதல்வரே திருச்சியில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்ட்டர்!

தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தின் பிரதான இடங்களில் நடிகர் விஜய்யை நாளைய முதல்வர் என அடையாளப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா புகைப்படங்களின் வரிசையில் விஜய் புகைப்படம் இருப்பது போல் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், 

Advertisement

1991 முதல் 2016 வரை சட்டமன்ற தேர்தலில் இரு பெரும் தலைவர்களை கண்ட தமிழகத்தில் தற்போது உள்ள வெற்றிடத்தை நிரப்ப வருக என குறிப்பிட்டு, இளம் தலைவரே, நாளைய தமிழக முதல்வரே! 2021இல் ஆட்சி உங்கள் தலைமையில் அமையட்டும்! தமிழகம் மகிழ்ச்சியில் மலரட்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் திருச்சியின் பிரதான சாலைகளான பாலக்கரை, திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. 

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள இந்த போஸ்டர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

Advertisement