திருச்சி மத்திய சிறை கைதிகள் ஒருவர் கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை - சிறைத்துறை டிஐஜி கனகராஜ் பேட்டி!

திருச்சி மத்திய சிறை கைதிகள்  ஒருவர்  கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை -  சிறைத்துறை டிஐஜி கனகராஜ் பேட்டி!

கொரோனா தொற்றிலிருந்து சமூகத்தை காத்திடும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மத்திய சிறையில் இருந்து திருச்சி விமான நிலையம் வரை கொரோனா வைரஸ் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Advertisement

முன்னதாக பேரணியை சிறைத்துறை டிஐஜி கனகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

150க்கும் மேற்பட்ட சிறைத் துறை காவலர்கள் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி திருச்சி மத்திய சிறையில் இருந்து விமான நிலையம் வரை சென்று மீண்டும் குடியிருப்புகள் வழியாக திருச்சி மத்திய சிறையை வந்தடைந்தனர்.

Advertisement

முன்னதாக சிறைத்துறை டிஐஜி கனகராஜ் பொதுமக்களுக்கு முக கவசங்களை வழங்கி முக கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். பின்னர் பேட்டியளித்த கனகராஜ் "திருச்சி மத்திய சிறையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். ஆயினும் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என தெரிவித்தார்".