புலன் விசாரணையில் சிக்கிய குற்றவாளிகள் - வெள்ளை சிவலிங்கம் சிலை மீட்பு!

புலன் விசாரணையில் சிக்கிய குற்றவாளிகள் - வெள்ளை சிவலிங்கம் சிலை மீட்பு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல்நிலைய வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மேலும் புலன்விசாரணை செய்ய வேண்டும் என சிலைதிருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் மனு தாக்கல் செய்தனர். 

Advertisement

இதன் அடிப்படையில் புலன்விசாரணை தொடரப்பட்டது. திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில், காவல் துணைக் கண்காணிப்பாளர் கதிரவன், காவல் ஆய்வாளர் செல்வகுமாரி, உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவின் புலன்விசாரணையில் இந்த வழக்கில் இதுவரை கண்டறியப்படாத புதிய குற்றவாளிகள் மதுரையை சேர்ந்த சிவசங்கரன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் கூடுதல் விலைக்கு விற்கும் பொருட்டு காசியில் பாபாஜி ஒருவரிடம் இருந்து திருடி எடுத்து வந்த 3 சிவலிங்கம் சிலைகளில் ஒன்றான வெள்ளை சிவலிங்கம் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகில் சிவா ஆசிரமத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

Advertisement

கைப்பற்றப்பட்ட 16.450கி.கி எடையுடன் உள்ள வெள்ளை சிவலிங்கம் கும்பகோணம் கூடுதலல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 

ஒப்படைக்கப்படவுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட சிவசங்கரன், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.