திருச்சியில் மாணவர்களை கண்ணீர் மல்க வாழ்த்திய பெற்றோர்கள்

திருச்சியில் மாணவர்களை கண்ணீர் மல்க வாழ்த்திய பெற்றோர்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்து உள்ள உப்பிலியபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சோபனாபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 393 மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வு எழுத தயார் நிலையில் பள்ளியை சேர்ந்த 73 மாணவ, மாணவிகள் உள்ளார்கள். வருகின்ற மார்ச் மாதம் 26ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதையொட்டி 73 மாணவ, மாணவிகளின் தாய்-தந்தையினரை வணங்கி பாதை பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி (பொறுப்பு) ஏற்பாடு செய்திருந்தார். அதை ஏற்று அப்பகுதி பெற்றோர்கள் பள்ளியில் உள்ள வளாகத்தில் ஒவ்வொரு பிள்ளைகளும் பெற்றோரின் பாதத்தின் கீழ் அமர்ந்து குங்குமம், சந்தனம் ஆகியவற்றை பெற்றோர் காலில் இட்டு ஆசி பெற்றனர்.

பெற்றோர்கள் மலர்களை தூவி பிள்ளைகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக அளவில் மதிப்பெண் பெற்று வெற்றி அடைய வேண்டும் என்று கண்ணீர் மல்க ஆசி வழங்கினார்கள். அரசு பள்ளிகளில் இதுபோன்று பெற்றோர்களை அழைத்து பாத பூஜை செய்வது எங்கள் பகுதியில் இதுவே முதல்முறை என்று பெற்றோர்கள் கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision