குப்பை கிடங்கா! மத்திய பேருந்து நிலையமா! - முகம் சுளிக்கும் பேருந்து பயணிகள்...

குப்பை கிடங்கா!  மத்திய பேருந்து நிலையமா!  - முகம் சுளிக்கும் பேருந்து பயணிகள்...

தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ளது திருச்சி மாவட்டம். இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு குறைந்த நேரம் ஆகுவதால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முதலிடம் பிடித்தது. நாளடைவில் தரவரிசை பட்டியலில் பின்தங்கியே காணப்படுகிறது. கொரோனா அச்சத்தில் இருக்கும் நிலையில், தற்பொழுது மழை தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. இதற்கிடையில் நோய் தொற்று அச்சம் ஒருபுறமிருந்தாலும் திருச்சி மாநகரில் சுகாதாரம் இன்றி பெரும்பாலான இடங்கள் காணப்படுகிறது. 

இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பேருந்து பயணிகள் வந்து செல்லும் நிலையில் மத்திய பேருந்து நிலைய சென்னை பேருந்துக்கள் வரும் நுழைவாயிலில் இடது புறம் குப்பைகள் கொட்டப்பட்டு இருக்கிறது. மேலும் அங்கு பேருந்து பயணிகள் சிறுநீர் கழிக்கும் இடமாக மாறியுள்ளது. ஏற்கனவே மத்திய பேருந்து நிலையத்திற்குள் சிறுநீர் கழிக்கக்கூடாது என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டும், இதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் பணியாளர் நியமிக்கப்பட்டு இருந்தாலும் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள சென்னை செல்லும் மார்கத்திற்கு எதிரே உள்ள சாலையை கடைகளில் உள்ள கழிவுகள் மத்திய பேருந்து நிலையம் உள்ளே கொட்டப்பட்டுகிறது. இங்கு நாள்தோறும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து சென்றாலும் இந்த அவலத்தை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement

மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தற்பொழுது உள்ள அலட்சியதால் மத்திய பேருந்து நிலையம் முழுவதும் சுகாதாரமின்றி காணப்படுகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் வந்ததும் மூக்கைப் பொத்திக்கொண்டு முகம் சுளித்து சென்று வருகின்றனர். மேலும் பேருந்து நிலையம் சுகாதாரமாக இருக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a