அரசுடமையாக்கப்பட்ட 106 வாகனங்கள் - திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் ஏலம்!

அரசுடமையாக்கப்பட்ட 106 வாகனங்கள் - திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் ஏலம்!

திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட அரசுடமையாக்கப்பட்ட 106 வாகனங்கள் திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டது.

Advertisement

திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய ஏலத்தில் வாகனத்தை ஏலம் எடுக்க விரும்புவோர் ரூபாய் 25 ஆயிரம் முன்வைப்பு தொகை செலுத்தி தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்து அதற்குரிய டோக்கன்களை பெற்றிருந்த நிலையில் 136 பேர் பங்கேற்றனர்.

Advertisement

மேலும் ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை  காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவுசெய்திருந்த நிலையில், ஏலம் எடுத்த வாகனத்திற்கான ஏலத் தொகையுடன் ஜிஎஸ்டி தொகையும் சேர்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்று சென்றனர்.
ரூபாய் ஆயிரத்து 500 முதல் அதிகபட்சமாக 5,000 வரை மட்டுமே இந்த இருசக்கர வாகனங்கள் ஏலம் எடுக்கப்பட்டன  என்பது குறிப்பிடத்தக்கது.