திருச்சி பண்ணை பசுமை கடையில் வெங்காயம் கையிருப்பு இல்லை- பொதுமக்கள் ஏமாற்றம்!

திருச்சி பண்ணை பசுமை கடையில்  வெங்காயம் கையிருப்பு இல்லை- பொதுமக்கள் ஏமாற்றம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பசுமைப் பண்ணை கடைகள் மூலமாக நேற்று 
துறை சார்பாக குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை துவக்கப்பட்டது. நபர் ஒருவருக்கு 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது இந்நிலையில் நேற்று 500 கிலோ வெங்காயம் விற்றுள்ளது.

Advertisement

பொதுமக்கள் தொடர்ந்து கிலோ 45 ரூபாய் வெங்காயத்தை வாங்க பண்ணை பசுமைக் கடைகள் நாடினர் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள பண்ணை பசுமை கடைகள் அனைத்திலும் வெங்காயங்கள் கையிருப்பில் இல்லை இதுகுறித்து கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் அருளரசுயிடம் கேட்டபோது 500 டன் வெங்காயம் ஆப்கானிஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் இரண்டு நாட்களில் வரும் எனவும் கூட்டுறவு இணைப் பதிவாளர்   தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் உள்ள பசுமை பண்ணை கடைகளில் தற்பொழுது வெங்காயம் இருப்பு இல்லை என்பதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். திருச்சியில்  மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாயும், பெரிய வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த இரண்டு வெங்காயங்களும் 600 டன் தேவைப்படும் நிலையில் 300 டன் மட்டுமே திருச்சிக்கு வருகிறது.

Advertisement

மொத்த விற்பனைக்கு வாங்கிய  சின்ன வெங்காயத்தை 140 ரூபாய்க்கும் பெரிய வெங்காயத்தை நூறு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விழாக்காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் நெருங்கி வரும் இந்த வேளையில் வெங்காய விலை உயர்வு மக்களை திக்குமுக்காட செய்து உள்ளது.