திருச்சியில் பெய்த தொடர் மழை -கல்லக்குடியில் 23.40 மிமீ பதிவு
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நேற்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களில் உள்ள உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருச்சியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மாவட்டத்தில் நேற்று(28.10.2020) நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 23.40மில்லி மீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம்:
கல்லக்குடி23.40மிமீ, புள்ளம்பாடி 10மிமீ,லால்குடி 8.20மிமீ, தேவமங்கலம்5.20மிமீ, சமயபுரம்2.40மிமீ. புலிவலம் 7மி.மீ,நவலூர் குட்டப்பட்டு 4.80மிமீ,திருச்சி ஜங்ஷன் 6மிமீ,ஒட்டுமொத்தமாக திருச்சியில் பெய்த மழையின் அளவு 117.90மிமீ.சராசரி மழையளவு 4.98மிமீ பதிவாகியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய...