கேடி.ஆர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு - பரபரப்பு நிமிடங்கள்

கேடி.ஆர்  திருச்சி மத்திய சிறையில் அடைப்பு - பரபரப்பு நிமிடங்கள்

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த K.T.ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இந்தப் புகார்களின் அடிப்டையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த மோசடி வழக்கில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 
ஆனால், அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார்.

தலைமறைவான அவரை கைது செய்வதற்காக 8 தனிப்படைகளை விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகர் ஏற்படுத்தினார். ஆனால், எங்கு தேடியும் அவரை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கான பணிகளில் ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்  நேற்று விருதுநகர் போலீசாரால் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் மதுரையில் சிறையில்  அடைக்கப்பட்டார்.

ஆனால் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணம் கருதி அவர் மதுரை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்ய  சிறைத்துறை முடிவெடுத்து அதன்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜியிடம், 'நீங்கள் கைது செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதே?' என்ற கேள்விக்கு, கேடி.ஆர் பதில் சொல்ல மறுப்பு தெரிவித்து பரபரப்புடன் அந்த நிமிடங்களை கடந்து சென்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn