பல்கலைக்கழக அளவில் பூப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திருச்சி தேசிய கல்லூரி

பல்கலைக்கழக அளவில் பூப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திருச்சி தேசிய கல்லூரி

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பூப்பந்து போட்டி திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. இப்போட்டியில் 9 கல்லூரிகளைச் சேர்ந்த அணியினர் போட்டியிட்டனர். போட்டியில் சிறப்பாக விளையாடி அரையிறுதிப் போட்டிக்கு 4 கல்லூரிகள் முன்னேறினர்.

அரையிறுதிப் போட்டியில் முதலில்  திருச்சி தேசிய கல்லூரி மற்றும் கும்பகோணம் அரசு கல்லூரி மாணவிகள் போட்டியிட்டனர். இதில் 35 -14, 35 - 11 என்ற கணக்கில் நேஷனல் காலேஜ் அணியினர் வெற்றி பெற்றனர். இரண்டாவதாக விளையாடிய  திருச்சி காவேரி மகளிர் கல்லூரி மற்றும் கரூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் போட்டியிட்டனர். இதில் 32 -35, 35- 30, 35- 21 என்ற கணக்கில் புள்ளிகளைப் பெற்று கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவிகள்  வெற்றி பெற்றனர்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய திருச்சி தேசிய கல்லூரி மற்றும் கரூர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இடையேயான போட்டியில் 35 -19, 35- 17 என்ற புள்ளிகள் பெற்று   திருச்சி தேசிய கல்லூரி அணியினர் போட்டியை வென்று   சாம்பியன் பட்டத்தை  தட்டி சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுநெறி கட்டுப்பாட்டாளர் சீனிவாச ராகவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோப்பைகளை  வழங்கி பாராட்டினார்.

மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி தேசிய கல்லூரியின் முதல்வர் சுந்தர்ராமன் வாழ்த்துக்கை தெரிவித்தார். இப்போட்டியில் பல்கலைக்கழக விளையாட்டு துறை செயலாளர் டாக்டர்.காளிதாசன், பெண்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவகுமார், முன்னாள் உடற்கல்வி இயக்குனர் தங்க பிச்சையப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர். கல்லூரியின் உடற்கல்வி துறைத்தலைவர் டாக்டர் பிரசன்ன பாலாஜி நிகழ்ச்சி மற்றும் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn