அங்கீகாரம் இல்லாமல் தவறான மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு - மத்திய மண்டல ஐஜி அறிவிப்பு

அங்கீகாரம் இல்லாமல் தவறான மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு - மத்திய மண்டல ஐஜி அறிவிப்பு

சமீபத்தில் திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டரை மாத பச்சிளம் குழந்தைக்கு, அந்தக் குழந்தையின் தாய் தாளாகவே வயிற்று வலிக்கு மருந்து கொடுத்து அதனால் உடல்நிலை மேலும் மோசமாகி பின்னர் மருத்துவ சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொதுமக்கள் இது போன்று தவறான சிகிச்சை முறைகளை தாங்களே கையாள்வதும், உடல் நலம் குன்றி மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வரும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொது மக்களுக்கும் உரிய கல்வித்தகுதி இல்லாமல், முறையான பயிற்சி பெறாமல் தவறான சிகிச்சை அளிப்பதும் சட்டப்படி குற்றமாகும்.

உரிய அங்கீகாரம் இல்லாமல் தவறான மகுத்துவ சிகிச்சை அளித்து அதன் காரணமாக நோயாளிகள் உயிர் இழக்க நேரிட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 304ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருண்ஷன் தெரிவித்துள்ளார். 

பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவிற்கு முறையாக மருத்துவம் படித்து பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுகி அவர்களது அறிவுரைப்படி மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn