அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ தேர்விற்கான இலவச பயிற்சி - அளிக்கும் திருச்சி IGNITTE கற்பித்தல் குழு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ தேர்விற்கான இலவச பயிற்சி - அளிக்கும் திருச்சி IGNITTE  கற்பித்தல் குழு

போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மன திறன் மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இன்றைக்கும் பல மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிறது.குறிப்பாக நீட்,ஜேஇஇ போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவது அரசு பள்ளி மாணவர்களின் மிகப் பெரிய கனவாக இருக்கின்றது.

அவர்களின் கனவுகளை தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் IGNITTEகற்பித்தல் குழு சாத்தியமாக்கி சாதனைப்புரிந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE MAINS மற்றும் ADVANCED தேர்வுகளுக்கு தொடர்ச்சியாக இலவச பயிற்சி அளித்து வருகிறது.

இந்தியாவின் மிகவும் கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்றில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இருப்பினும், சரியான வளங்களைப் பயன்படுத்தியும், துல்லியமான திட்டமிடலினாலும் மற்றும் அசைக்க முடியாத உறுதியுடனும் செயல்பட்டால் சாத்தியமற்றது எதுவுமில்லை. ஒவ்வொரு ஆண்டும் 25க்கும் மேல் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை வளர்க்கும் பொருட்டு பயிற்சி அளித்து வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு முதல் குழுவில் பயிற்சி பெற்று வந்த சேவல்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் மாணவர்களில் அருண்குமார், பாலாஜி, நிர்மல், ஸ்வேதா, ஆகிய அனைவரும் jee தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

அருண்குமார் JEE MAIN 2021 தேர்வில் 98.24 % மற்றும் JEE ADVANCED தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 12175வது இடத்தையும் பெற்றுள்ளார். IGNITTE உடனான மாணவனின் பயணம் வெற்றிகரமாக இருந்தாலும், சவால்கள் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது. 2019 இல் அவர் IGNITTE குழுவின் மாணவனாக நுழைந்ததிலிருந்து, கல்லூரி வளாகத்தில் சீரான இடைவெளிகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

கற்பிக்கப்பட்ட பாடங்களில் பயிற்சி மேற்கொள்வதற்கு தேவையான புத்தகங்களும் , பயிற்சி வினாக்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலங்களில், வகுப்புகள் இணையவழியில் தொடர்ந்தன. இணையவழிக் கல்வியின் ஆரம்ப காலகட்டத்தில், IGNITTE குழுவின் வழிகாட்டிகளுக்கு YOUNG INDIANS நிறுவனம் வழங்கிய டிஜிட்டல் எழுதும் அட்டைகள் பெரிதும் உதவின, இது கருத்துக்களை எளிமையாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் விளக்குவதற்கு ஏதுவாக இருந்தது.

பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடங்களும் முடித்ததும், ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் கேள்விகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கவும், JEE MAINS தேர்வினை பழக்கப்படுத்தவும் மாதிரி தேர்வுகள் நடத்தியுள்ளனர். இரண்டு வருட விடாமுயற்சிற்கும், உறுதியான உழைப்பிற்கும் பிறகு, அருண் நம்பிக்கையுடன் JEE MAIN தேர்வுகளை IGNITTE குழுவின் பயிற்சியின் உதவியினால் வெற்றிப்பெற்றுள்ளான்.

அருண் JEE ADVANCED தேர்வில் கலந்து கொண்டு அகில இந்திய தரவரிசையில் (AIR) 12175 வது இடம் பெற்றான். JoSAA கலந்தாய்வின் முதல் சுற்றில் ஹைதராபாத்திலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-H) Chemical Engineering துறையில் இடம் கிடைத்துள்ளது. 

அருண் குமார் உட்பட பல மாணவர்களின் கனவுகளை இதுவரை அடைய உதவிய IGNITTE , இதுபோன்ற மாணவர்களின் 'இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றில் படிக்க வேண்டும்' என்ற கனவினை அடைய தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

IGNITTE இன் உறுப்பினரான அபிராமி கூறுகையில்..."JEE MAIN and ADVANCED தேர்வுகளில் வெற்றி பெறுவது எந்த ஒரு மாணவருக்கும் கடினமான பணியாகும்.  இத்தேர்வினை வெல்லும் கனவுடனும் நம்பிக்கையுடனும் வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழிகாட்டுகிறோம். கடந்த ஒன்பது மாதங்களாக , நாளொன்றுக்கு 6 முதல் 8 மணிநேரம் வரை அருணுக்கு வகுப்புகள் நடத்தப்படுவது உறுதி செய்தோம். 

தேவையான பயிற்சி வழங்குவதுடன் , தேர்வினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள மன உறுதியையும் வழங்கி வந்தோம். ஆரம்ப நிலையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும், IGNITTE அதன் பயணத்தில் இது மற்றொரு வெற்றிகரமான ஆண்டாக அமைவதை உறுதிப்படுத்தியது. வரும் ஆண்டுகளிலும் தன்னம்பிக்கைக மிகுந்த மாணவர்களின் கனவுகளை அடைய வழிகாட்டுவதில் பெருமையும்,மகிழ்ச்சியும் கொள்கிறது IGNITTE" என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision