கண்டுகொள்ளாத மாநகராட்சி - களத்தில் இறங்கிய காவல் ஆய்வாளர்!!

கண்டுகொள்ளாத மாநகராட்சி - களத்தில் இறங்கிய காவல் ஆய்வாளர்!!

Advertisement

திருச்சியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருச்சியிலுள்ள பல சாலைகளில் பள்ளங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது.

Advertisement

குறிப்பாக திருச்சி - கரூர் சாலையில் அண்ணாநகர், தென்னூர் மற்றும் சாஸ்திரி ரோடு சாலைகளில் பெரும்பாலான பகுதிகள் குண்டும் குழியுமாக மழை நீர் தேங்கியது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளராக இருக்கும் நாவுக்கரசர் அண்ணா நகர், தென்னூர் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பள்ளமான இடங்களில் மண்ணை கொட்டி சரி செய்து வந்தார். 

அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் இத்தகைய செயல் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் உடனடியாக தார் ஊத்தி சாலையை சீர் செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.