திருச்சியில் 24 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய எவ்வித தடையும் இல்லை புதிய அரசாணை  வெளியீடு - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சியில் 24 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய எவ்வித தடையும் இல்லை புதிய அரசாணை  வெளியீடு - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சியில் தென்னூர் ஆட்டு மந்தை பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அமர்ந்த நிலையிலுள்ள சிலையை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு...... திருச்சியில் சிவாஜி சிலையை நாங்கள்தான் அமைத்தோம். சிலை திறப்பது தொடர்பான அனுமதி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சிலையை திறப்போம் என குறிப்பிட்டார். திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு பட்டா கேட்டு உள்ளார்கள். முறைப்படி ஆய்வு செய்வோம்.

திருச்சியில் வக்பு போர்டு தங்களுக்கு 24 கிராமங்கள் சொந்தம் என தகவல் வந்த நிலையில் உடனடியாக யாரும் நிலம் வாங்க விற்க பத்திர பதிவு செய்ய முடியாத நிலை இருந்த தகவல் குறித்து கேட்டதற்கு 24 கிராமங்களுக்கும் பத்திர பதிவு செய்யலாம் என்ற புதிய அரசாணை வெளியிடப்பட்டு விட்டது.

நேற்றே பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது என்றார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைகளை வட்ட செயலாளர்கள் அரசு அனுமதி உடன் ஒவ்வொரு இடத்திலும் அமைத்தால் அதனை முறைப்படி திறப்போம் எனவும் குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO