சட்டவிரோத மது விற்பனை செய்து வீட்டை பூட்டி கொண்டு உள்ளே இருந்த நபர் - வெளியே காத்திருந்த தனிப்படை போலீசார்

சட்டவிரோத மது விற்பனை செய்து வீட்டை பூட்டி கொண்டு உள்ளே இருந்த நபர் - வெளியே காத்திருந்த தனிப்படை போலீசார்

Advertisement

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே சட்டவிரோதமாக 3 பேர் மது விற்பதாக திருச்சி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.‌ இதனடிப்படையில் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, தனிப்படை காவல் துணை கண்காணிப்பாளர் பால்சுதர் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு பேரை கைது செய்து விட்டு ஒருவர் மட்டும் தப்பிச்சென்று வீட்டை வெளிப்புறம் பூட்டிவிட்டு உள்ளே புகுந்துள்ளார்.

தலைமறைவாக வீட்டை பூட்டி உள்ளே தஞ்சம் புகுந்த நபரை தனிப்படை போலீசார் காத்திருந்து பிடித்தனர். முசிறி குணசீலம் கல்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (49), முசிறி ஆமூர் பகுதியை சேர்ந்த மாசில்லாமணி(58), முசிறி குணசீலம் காந்திநகர் பகுதியை சேர்ந்த மருதையா (43) ஆகியோரை பிடித்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement

இதில் 75 மதுபாட்டில்கள், 2780 ரூபாய் ரொக்க பணமும், 3 செல்போன்களும் பறிமுதல் செய்து 3 பேரையும் வாத்தலை காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து வாத்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.