3 கோடி பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு 6 லட்சத்தை இழந்த திருச்சி முதியவர்

3 கோடி பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு 6 லட்சத்தை இழந்த திருச்சி முதியவர்

திருச்சி மாவட்டம் சோமனசம்பேட்டை அளவுக்கு பகுதியை சேர்ந்தவர் நிர்மல் குமார் (67). இவர் அதே பகுதியில் லேத்து பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் நான்காம் தேதி நிர்மல் குமாரின் செல்போன் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் பிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரில் அந்த அந்த எஸ்எம்எஸ் உங்களது செல்போன் எண்ணுக்கு மூன்று கோடி மதிப்பில் வெளிநாட்டு பணம் பரிசு விழுந்து உள்ளது.

அதை பெற கீழ்க்கண்ட ஈமெயில் மட்டும் செல்போன் நம்பரை தொடர்பு கொள்ளவும் என்று கூறப்பட்டிருந்தது. இதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த அவர் உடனடியாக அதில் குறிப்பிட்டு இருந்த செல்போன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர் முனையில் பேசி நபர் பரிசுத்தொகை வெளிநாட்டு பணம் என்பதால் அதை இந்தியாவுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி, உலக வங்கி ஆகியவற்றிடம் அனுமதி வாங்க வேண்டும், அத்துடன் ஜிஎஸ்டி பதிவு செலவு ஆகியவை உள்ளது என்று தெரிவித்து மூன்று வங்கி கணக்குகளை கூறி அதற்கு 6 லட்சம் அனுப்பும்படி கூறியுள்ளார்.

இதை நம்பிய நிர்மல் குமார் அந்த வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ஆறு லட்சத்தை அனுப்பி உள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு ஒரு தபால் வந்தது அதில் பேங்க் ஆஃப் இங்கிலாந்து என்ற பெயரில் ஒரு ஏடிஎம் கார்டு இருந்தது. தபால் அவருடைய கைக்கு கிடைத்தது அறிந்து கொண்ட அந்த கும்பல் நிர்மல் குமாரை தொடர்பு கொண்டு தற்பொழுது உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் கார்டு மூலம் பரிசுத் தொகையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பரிசுத்தொகையை பெரிய தொகை என்பதால் அதை விடுவிக்க மேலும் 7 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினர். ஆனால் நிர்மல் குமாரிடம் பணம் இல்லாததால் நடந்த விபரங்களை கூறி நண்பர் ஒருவரிடம் ஏழு லட்சம் கடன் கேட்டுள்ளார்.

அவர் நிர்மல் குமார் மோசடி கும்பலிடம் சிக்கி இருப்பதை உணர்ந்து அவருக்கு ஆலோசனைகளை கூறி மேற்கொண்டு பணத்தை செலுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கினார். மேலும் இதுபற்றி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் நிர்மல்ராஜ் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல் ஆய்வாளர் அன்பு செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வட மாநிலத்தை சேர்ந்த ஆன்லைன் மோசடி கும்பல் தான் நிர்மல் குமார் ஏமாற்றி ஆறு லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO