அதிமுகவுக்கு இலவச ஆலோசனை வழங்கிய திருச்சி எம்.பி

அதிமுகவுக்கு இலவச ஆலோசனை வழங்கிய திருச்சி எம்.பி

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் நாடுதழுவிய ஆர்பாட்டம் நடைபெற்றது. ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களை சேர்க்கவும், வேலைவாய்ப்பை பெருக்கவும் மத்திய அரசு கொண்டுவந்த 'அக்னிபாத்' திட்டத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணிபுரியமுடியும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுத்துவருகிறது. இந்த திட்டத்தில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தாலும், முற்றிலும் ரத்துசெய்யக்கோரி தமிழகத்திலும் போராட்டங்கள் தொடர்கிறது.

அந்தவகையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆணைக்கிணங்க நாடு தழுவிய அளவில் ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் இன்றைய தினம் நடைபெறுகிறது. அதன்படி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவஹர் தலைமையில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர் எம்பி கூறுகையில்.... 2 ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காட்டி ஒரு லட்சம் பேரை காலத்தில் சேர்க்காமல், இளைஞர்களின் வாழ்வை வீணடித்தது. 4 ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணி அமர்த்துவது என்பது இந்திய ராணுவத்தை மற்றும் ராணுவத்தின் முதுகெலும்பை பலவீனப்படுத்தும், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

ஆறு மாதம் மட்டுமே பயிற்சி கொடுத்து அனுப்பப்படும்,  இராணுவத்தினர் போதிய பயிற்சி இல்லாமல் நவீன ஆயுதங்களைக் கொண்டுள்ள சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை எதிர்த்து சண்டையிடுவது என்பது முடியாததாகி விடும், நமது ராணுவ வீரர்களை பலவீனப்படுத்தி அண்டை நாடுகளுக்கு உதவுவது போல ஆகிவிடும். 4 ஆண்டுகள் பணி முடித்த ராணுவ வீரர்கள் அம்பானி, அதானி வீட்டில் பணிபுரிய முடியுமா? இளைஞர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்தும் நோக்கமாக உள்ளது.

ராணுவத்தில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கும் முழுமையான இராணுவ வீரர்களாக நவீன துப்பாக்கிகளை கையாளும் வகையில் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். இந்த அக்னிபாத் திட்டம் என்பது இந்திய ராணுவத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அதேநேரம் இந்திய இளைஞர்களை வேலையற்றவர்களாக அவர்களை பலவீனப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது என்பதால் இதனை எதிர்க்கிறோம். 

வறுமை, கஷ்டம், வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ள இளைஞர்கள்  4000 பேர் தமிழகத்தில் இருந்து ராணுவத்தில் சேர்ந்துள்ளனர், அவர்கள் சாதக பாதகம் புரிந்து அறிந்திருக்கவில்லை. ராணுவத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் சேரவில்லை. அதிமுகவிற்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைக் கூற நான் ஜோசியர் கிடையாது. எந்த மாநிலத்திலும் இரட்டை தலைமையில் மாநில கட்சி மற்றும் அகில இந்திய கட்சிகள் இயங்கவில்லை, இரட்டை குதிரை சவாரி, இரட்டை படகில் பயணம் என்பது முடியாது.

எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா என யாராக இருந்தாலும் சரி ஒற்றை தலைமையே அதிமுகவிற்கு வேண்டும். தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை தலைமையாக தேர்ந்தெடுத்து இயங்க வேண்டும். ஜனநாயக நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும், எதிர்க்கட்சி ஒற்றுமையாக இருக்க ஒற்றை தலைமை வேண்டும், அது நியாயமானது தான்.  அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் அபிப்பிராயங்கள் பிரச்சனை ஏற்படும் போது எல்லா தரப்பினரும் முறையாக நடந்து கொள்ள வேண்டும்,.

தண்ணீர் பாட்டில் வீசுவது முறையற்ற வகையில் நடந்து கொள்வது கூச்சல் போடுவது ஜனநாயகத்தில் கண்டனத்திற்கு உரியது, ஜனநாயக ரீதியில் தீர்வு காண வேண்டும் என்பதே எனது இலவச ஆலோசனை. அதிமுக பாஜகவின் கைப்பாவையாக மாறி விட்டது. காங்கிரஸின் பேச்சை அதிமுக கேட்டிருந்தால் எப்பவோ உருபட்டு இருக்கும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய....... https://t.co/nepIqeLanO