தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் கடுமையான ஊரடங்கா ?
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆக்சிஜன் வசதியுடன் 300 படுக்கை வசதிகளும் சித்த மருத்துவ சிகிச்சைக்கு 60 படுக்கை வசதிகள் கொண்ட தரைதளம், முதல்தளம், இரண்டாம்தளங்களில் மருத்துவர்களுடன் சிகிச்சை மையத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு திருச்சியில் முதன் முறையாக சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்.... திமுகவை பெருவாரியான இடங்களில் வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றியை செய்தியாளர்கள் மூலமாக தெரிவித்தார். மே 2 முதல் அரசு அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பேசிய போதே கோவிட் தடுப்பு பணியை துவக்கினேன். முதல்வராக பதவியேற்பு முன்னதாகவே கோவிட் தடுப்பு பணி பத்திரிக்கைதுறை முன்கள பணியாளர்கள் பணி அறிவிப்பு என பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டேன்.
திமுக ஆட்சிக்கு வந்த 14 நாட்களில்16,938 புதிய படுக்கைகள் 7800 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 30 இயற்கை மருத்துவ மையங்கள், 239 மெட்ரிக் டன் கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி, 375 மெட்ரிக் டன் ஆக்சிஜன் 100 மெட்ரிக் டன்னும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு பெறப்பட்டுள்ளது. போர்கால பணி மூலம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை செய்து வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியை விட கோவிட் தொற்று நெகட்டிவ் என்ற நிலை வரும் போது தான் முழுமகிழ்ச்சி அடைவேன் என்றார்.
தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 9 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளார். அவர்களுக்கான மருந்துகள் உள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு சிறிது அளவு மற்றும் தொற்று குறைந்துள்ளது. மேலும் சிறு குறு தொழில் மற்றும் அனைத்து தொழில் நிறுவனங்களும் முழுமுடகத்தை மேலும் கடுமையாக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். இன்று நடைபெறும் அனைத்து கட்சி மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மத்திய அரசிடம் தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் கேட்டு வலியுறுத்தி வருகிறோம். அவர்களும் கொடுத்து வருகிறார்கள். தொடர்ந்து அதிக அளவில் தடுப்பூசிகள் கேட்கிறோம் தற்போது போதுமானதாக இல்லை அதுவும் கேட்டுப் பெறுவோம் என்றார். பத்திரிகை ஊடகத் துறையினரை முன்கள பணியாளர்களாக அறிவித்துள்ள நிலையில் விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும்.
இரண்டாம் வகுப்பு பொது தேர்வு குறித்து பள்ளிகல்வித் துறை அமைச்சர் அதிகாரிகளிடம் பேசி முடிவெடுத்து பிறகு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அறிவிப்பார் என்றார். ஆசிரியர்களின் சம்பளம் பாதி அளவு குறைக்கப்படும் என்பது வதந்தி அதை நம்ப வேண்டாம் என்றார். தற்போது பிரதமரை நேரில் சந்திக்கக் கூடிய சூழ்நிலை இல்லை. சூழ்நிலை வந்தவுடன் சந்தித்து தமிழகத்தின் நிதி உதவிகளை அவர்களிடம் கேட்டுப் பெறுவோம். திருச்சி பெல் அல்லது ராணிப்பேட்டையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. திருச்சி அல்லது ராணிப்பேட்டையில் இன்னும் ஒரு மாதத்தில் அதன் உற்பத்தியை தொடங்குவார்கள் என குறிப்பிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK