குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீரேற்று நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு

குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீரேற்று நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொள்ளிடம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையங்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி (02.08.2024) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் வெள்ள பெருக்கால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கன அடியாக இருந்து வருகிறது இந்த தண்ணீர் முழுவதும் முழுமையாக திறக்கப்பட்டு வருவதால் காவிரி கரையோர பகுதியான நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ள கரையோரத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கொள்ளிடம் மற்றும் காவேரி படுக்கையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை நீரேற்று நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்குவதில் சிரமம் உள்ளதா, நீரேற்று நிலையத்திற்கு பாதிப்பு உள்ளதா, என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டு இச்சூழலில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் (தஞ்சாவூர்) திரு. எழிலரசன் நிர்வாக பொறியாளர்கள் நாக ஆனந்த், பன்னீர்செல்வம், ராஜேந்திரன், உதவி நிர்வாக பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision