குழந்தை திருமணம் குறித்து திருச்சியில் 6 வட்டாரங்களில் அதிகளவில் புகார்கள்

குழந்தை திருமணம் குறித்து திருச்சியில் 6 வட்டாரங்களில் அதிகளவில் புகார்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், வையம்பட்டி வட்டாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்குகான குழந்தை திருமணம் தடுத்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நேற்று  நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையேற்று குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் 
ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சிறப்பாக பணிப்புரிய வேண்டும்.

குழந்தை திருமணம் நடக்காமலும், குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் நடக்காமலும் தடுப்பதற்கு 
முயற்சிக்க வேண்டும் எனவும், புகார்கள் பெறும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் குழந்தைகள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் 
வளர்வதற்கான செயல்பாடுகளை கிராம அளவிலான பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் அனைவரும் 
மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 383 குழந்தை திருமணம் தொடர்பான புகார்கள் பெறப்பட்டு குழந்தைகள் மீட்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், குறிப்பாக 6 வட்டாரங்களில் அதிகளவில் புகார்கள் பெறப்பட்டதை 
முன்னிட்டு அவ்வட்டாரங்களில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பணிகள் கூடுதல் கவனத்துடன் நடத்திட
அலுவலர்கள் பணிக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமலும், குழந்தைகள் பாதுகாப்பாக உள்ள சூழ்நிலையை அனைவரும் உருவாக்க 
வேண்டும் எனவும், குழந்தைகள் கல்வி கற்றிட உதவிடும் வகையிலும் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர் ஐ.முரளிகுமார் மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவா் என்.குணசீலன், மாவட்ட சமூகநல அலுவலர் அ.தமீமுன்னிசா

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரா.அனிதா, குழந்தை நலக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணமூர்த்தி, வட்டார மருத்துவ 
அலுவலர் மருத்துவர்.வெ.ஜெயலெட்சுமி, உதவி ஆய்வாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் எம்.மணிகண்டன், எஸ்.ஆறுமுகம், நகர ஒருங்கிணைப்பாளர், சைல்டுலைன் ஆகியோர் கலந்து 
கொண்டு துறை சார்ந்த நலத்திட்டங்கள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் கருத்துகளை தெரிவித்தனர். 
இக்கருத்தரங்கில் வையம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம 
நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn