இனிமேல் எந்த ரவுடிகளிடமும், தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் - திருச்சி சாமியார் வீடியோ வெளியீடு

இனிமேல் எந்த ரவுடிகளிடமும், தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் - திருச்சி சாமியார் வீடியோ வெளியீடு

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடிகளின் பெயர்களைக் கூறி சாமியார் ஒருவர் பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் பிரபல ரவுடி ஜெய் என்கிற கொட்டப்பட்டு ஜெய் குறித்து நீதிமன்றம் சென்று சாட்சி சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும் எனக்கு காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ள அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்தி ஆகியோரிடம் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும்,

அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியனுக்கு எல்லா இடத்திலும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், என்னை என்கவுன்டர் பட்டியலிருந்து பெயரை நீக்குவதாகவும், வழக்குகளை முடித்து கொடுப்பதாகவும், என்னை எதிர்த்து யாரும் சாட்சி சொல்லும்பட்சத்தில் அவர்களை கொலை செய்துவிடு என்று அல்லித்துறை சாமியார் கூறி கொட்டப்பட்டு ஜெய் சாட்சியங்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

ரவுடி ஜெய் என்கிற கொட்டப்பட்டு ஜெய், அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 60 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி கொட்டப்பட்டு ஜெய் தொடர் குற்ற செயலை தடுக்கும் பொருட்டு கொட்டப்பட்டு ஜெய் மீது குண்டாஸ் போடப்பட்டது. இதனையடுத்து போலி சாமியார் தேஜாஸ் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக்கு திருச்சி நீதிமன்றம் பலமுறை ஜாமின் வழங்க மறுத்த நிலையில், வழக்கறிஞர் கார்த்திக்கு மட்டும் பிணை வழங்கி வெளியே விட்டது.

மூன்று முறை பிணை மறுக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து அதன்பின்பு சாமியார் தேஜாஸ் அல்லித்துறை பாலசுப்பிரமணியனக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் பிணை கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பிணையில் வெளியே வந்த அல்லித்துறை சாமியார் தான் இனிமேல் எந்த ரவுடிகளிடமும், தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என்றும் மீண்டும் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளப் போவதாக கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn