திருச்சியில் பார்மலின் தடவிய மற்றும் கெட்டுப்போன மீன்கள் 650 கிலோ மீன்கள் பறிமுதல்

திருச்சியில் பார்மலின் தடவிய மற்றும் கெட்டுப்போன மீன்கள் 650 கிலோ மீன்கள் பறிமுதல்

திருச்சி உறையூர் லிங்கம் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டை உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு மற்றும் திருச்சி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் சர்மிளா உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் 5 மொத்த விற்பனையாளர்களும், 9 சில்லறைக் கடைகளை ஆக மொத்தம் 14 கடைகளும் 3 கண்டெய்னர் லாரிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் பார்மலின் தடவிய 350 கிலோ  மீன்களும் கெட்டுப்போன மீன்கள், 300 கிலோவும் ஆக மொத்தம் 650 கிலோ மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அளிக்கப்பட்டன.

இதன் மூலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு கூறுகையில் திருச்சி மாவட்டத்தில் மீன் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் பார்மலின் தடவிய மீன்களையும் அல்லது கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் இனி வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பொதுமக்களும் இதுபோன்ற கெட்டுப்போன மீன்களோ அல்லது பார்மலின் தடவிய மீன்கள் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் புகார் அளிக்கலாம்

மாவட்ட புகார் எண் : 9944959595 / 9585959595 மாநில புகார் : 9444042322

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn