வேலைவாய்ப்பு மையம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் -மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

வேலைவாய்ப்பு மையம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் -மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

 திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார். இன்று (07.02.2023) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (SSC-MTS) பல்நோக்கு பணியாளர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து, பயிற்சி கையேட்டினை வழங்கி உரையாற்றினார்.

இப்பயிற்சி வகுப்பில் போட்டித்தேர்வர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர்  போட்டித்தேர்வினை எதிர்கொள்வது குறித்து போட்டித்தேர்வுக்கு தயாராகுவோர்களிடம் கலந்துரையாடி அவர்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தினார். மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர்  போட்டித்தேர்வுகள் குறித்தும், பேட்டித்தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதில் 81 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், மண்டல இணை இயக்குநர் மு.சந்திரன், துணை இயக்குநர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஐ.மகாராணி. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn