குவைத் தீ விபத்தில் இறந்தவரின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி

குவைத் தீ விபத்தில் இறந்தவரின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் எபினேஷன் தனலட்சுமி தம்பதியரின் மகன் ராஜூ (53). இவர் lகுவைத் நாட்டில் உள்ள என்.பி.டி.சி நிறுவனத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கண்டெய்ணர் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

அவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், குணசீலன், சம்பத்குமர் என்ற மகன்களும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். அவருக்கு 2025 ஆகஸ்ட் மாதத்திலும் பணி ஒப்பந்தம் நிறைவடைகிறது. இந்த நிலையில் அவர் குவைத் நாட்டில் தங்கியிருந்த விடுதியில் கடந்த 12ம் தேதி அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் இந்தியாவை சேர்ந்த 40 பேர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறைஅமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு தமிழக முதல்வர் இறந்து போன தமிழர்களின் உடலை கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இந்த நிலையில் இறந்து போனவர்களை 31 உடலில் போர் விமானத்தின் மூலம் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு காலை 10:45 மணியளவில் வந்தடைந்தது.

அங்கு விரைந்து சென்ற செஞ்சி மஸ்தான் தமிழர்களின் உடல்களை பெற்று ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு மதியம் 1:30 மணி அளவில் அனுப்பி வைத்தனர். பின்னர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராஜு வின் உடல் இரவு 10:22 மணி அளவில் அவரது வீட்டிற்கு வந்தடைந்தது.

ராஜுவின் உடலை பார்த்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி அழுதனர். இதனை தொடர்ந்து அரசு சார்பில் திருச்சி டி ஆர் ஓ ராஜலட்சுமி, ஏடிஎஸ்பி குத்தலிங்கம் ஆகியோர் நேரில் ராஜுவின் உடலுக்கு மலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அப்பொழுது ராஜு விடுப்பு எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வரலாம் என அடுத்த மாதம் 20ஆம் தேதி வருவதற்கு விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்ததாகவும், அதற்குள் இப்படி விபத்தில் சிக்கி ராஜு இறந்து விட்டதாகவும் கூறி அவரது குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் காண்பவரின் கண்களும் கலங்கின.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision