ஸ்பிரிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு மாவட்டம் அப்பக்கூடல் பகுதியில் இருந்து மதுபானம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான சுமார் 80 லட்சம் மதிப்புள்ள 45 ஆயிரம் லிட்டர் ஸ்பிரிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி மன்னார்குடி நோக்கி புறப்பட்டது.
இந்நிலையில் லாரி திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூர் நொச்சியம் அடுத்துள்ள ரெட்டைவாய்க்கால் பகுதியில் மன்னார்குடி நோக்கி வந்த லாரி இன்று அதிகாலை 02:00 மணியளவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மேலும் இச்சம்பவம் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் நேரில் சென்று லாரியின் இடிபாட்டில் சிக்கிய கால் முறிவு ஏற்பட்டு காயமடைந்த லாரி ஓட்டுனரான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேகர் (55) மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து விபத்துக்குள்ளான லாரியில் 'ஸ்பிரிட்' இருப்பத்தை உறுதி செய்த சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஶ்ரீரங்கம் தீயணைப்பு நிலைத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ஶ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று லாரி கவிழ்ந்ததில் லாரியில் உள்ள ஸ்பிரிடினால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் இன்று மாலை 2 மணியளவில் மூன்று ஹைட்ராலிக் கிரைன் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்குப் பின்பு டேங்கர் லாரியை பத்திரமாக மீட்டு எடுத்தனர். இதனால் திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் வரிசையில் நின்றது.
மேலும் எந்த ஒரு அசம்பாவிதமும் நேரிடாமல் பத்திரமாக மீட்பு பணியில் ஈடுப்பட்ட மண்ணச்சநல்லூர் காவலர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களுக்கு கிராம மக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டினர். இதையடுத்து விபத்து நிகழ்ந்தது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision