டிஜி பிளஸ் நிறுவனம் சார்பில் டிஜிட்டல் ஸ்டேட்டர்ஜி குறித்து இலவச பயிற்சி
டிஜிட்டல் என்பது தொழிலில் இருந்தால் நல்லது என்ற கட்டத்தை தாண்டி அது இல்லையென்றால் தொழில் நடத்தவே முடியாது என்ற கட்டத்தில் இன்று வாழ்கிறோம். டிஜிட்டல் வணிகம் குறித்து தெளிவான பார்வை அதில் நாம் வெற்றி பெறுவதற்கு உதவும்.அவ்வாறு நம் தொழிலில் வெற்றி பெறுவதற்கான டிஜிட்டல் ஸ்டேட்டர்ஜி குறித்த. இலவச பயிற்சியை இன்று Digi plus நிறுவனம் வழங்கியது.
இன்று, திருச்சியில் உள்ள ஹோட்டல் மார்விக்கில், டிஜிபிளஸ் ஏஜென்சியைச் சேர்ந்த பரத்.எம்.வி தலைமையில் டிஜிட்டல் முறையில் வணிகங்கள் வளர உதவும்டிஜிட்டல் ஸ்டேட்டர்ஜி பற்றிய இலவசப் பயிற்சி நடைப்பெற்றது. சமூக ஊடகங்களான, கூகுள் மற்றும் ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலம் டிஜிட்டல் வணிகத்தை அதிகரிப்பதற்கான உத்திகளையும், கூகுள் மேப், வீடியோ மார்க்கெட்டிங் பயன்படுத்துவதற்குமான உத்திகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த ஒரு நாள் பயிற்சியில் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision