விலைவாசி உயர்வை கண்டித்து வாடகை கட்டணத்தை உயர்த்தி ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் அடையாள தொடர்பு வேலை நிறுத்த போராட்டம் -மாவட்ட ஆட்சியரிடம் மனு
விலைவாசி உயர்வை கண்டித்து வாடகை கட்டணத்தை உயர்த்தி ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் அடையாள தொடர்பு வேலை நிறுத்த போராட்டம். மாவட்ட ஆட்சியரிடம் மனு.காப்பீடு மற்றும் வாகன வரி, டீசல், உதிரி பாகங்கள் போன்றவற்றின் விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சி மாவட்ட அனைத்து ஜேசிபி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மஞ்சுநாத் தலைமையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒருபகுதியாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில் பகுதியில் மாவட்ட தலைவர் மஞ்சுநாத் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜேசிபி எந்திரங்களை வரிசையாக நிறுத்தி வைத்து 3வது நாளாக இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்களது போராட்டம் குறித்து திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையர்கள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில்.... அரசு கட்டுமான துறைகளிலும், இரயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம், மாநகராட்சி போன்ற துறைகளுக்கு ஜேசிபி வாகனத்தை பழைய வாடகைக்கு ( 1 மணி நேரத்திற்கு 1000 ) வேலை செய்து வந்தோம். இந்நிலையில் ஜேசிபி தொழிலுக்கு தேவையான எரிபொருள் மற்றும் உதிரிபாகங்கள் விலை குறைப்பதற்கு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இதனால் ஜேசிபி வாகனம் 1 மணி நேரத்திற்கு 1300, மினிமம் சார்ஜ் 3500 என நிர்ணயித்துள்ளோம். இந்த விலை நிர்ணயத்தை அரசு ஒப்பந்ததாரர்கள், கட்டிட வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தொடர் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH