பிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் தாய்மொழி  நாள்

பிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்றுத் துறையில்   தாய்மொழி  நாள்

பன்னாட்டு தாய்மொழி நாளை நினைவுகூர்ந்து இன்றைய நாளினில் பிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் சார்பில் சிறப்பு கருத்தரங்கத்திற்க்கு கணினி துறையின் தலைவர் முனைவர் .சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது. வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் .  ஃபெமிளா அலெக்சாண்டர் வரவேற்பு நல்கினார் .

வரலாற்றுத் துறையின் மாணவ மாணவியரின் விருப்பத்திற்கு இணங்க மாநிலங்களவை உறுப்பினரும் துணைத் தலைவர் திருச்சி சிவா சிறப்புரையாற்றினார். மொழிகளின் தோற்றம், அது கடந்து வந்த பல பரிமாணங்கள், வளர்ச்சி , பற்றி விரிவாக மாணவரிடம்   சிறப்புரையாற்றினார் .


 மொழி சித்திரமாய் தொடங்கி ஒலி மற்றும் எழுத்துருவாக்கம் உருவான விதத்தையும்  உலக தாய்மொழிகள் முக்கியத்துவத்தைப் பற்றியும் சிறப்பாக மாணவரிடம்  உரையாற்றினார் ..
தன் தேவைக்காக மட்டுமின்றி ஒடுக்கப்படுகிற மற்றவர்களின்  உரிமைக்காகவும் அடிப்படை தேவைக்காகவும், முன்வந்து பரிந்து பேசுகிற ஒன்றுதான் பேச்சுரிமை என்றும் இதற்கு எடுத்துக்காட்டாக  பெரியாரின் கருத்துகளை பகிர்ந்து கொண்டார் .

கிரேக்க ,லத்தீன்,எபிரேய சீன மொழி சமஸ்கிருதம் தமிழ் மொழிகளில் கிரேக்க லத்தீன் மொழி அழிந்து விட்டது என்றும் எபிரேய மொழி பைபிளின் பயன்பாட்டினால் உயிர்த்து இருக்கிறது என்றும் சீனமொழி வடிவத்திலேயே தங்கி விட்டதால் அதை  பிறர் கற்றுக் கொள்ள முடியவில்லை .சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை என்பதாலும் சிறப்பு பெறவில்லை என்றும்  தமிழ் மட்டும் உயிருடனும்  உயிர்ப்புடனும் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதால் என்றும் வளர்ந்து   நிலைத்து நிற்கும் என்றும்  கூறினார்.

இந்த விழாவில் 250க்கும் மேற்பட்ட மாணவர்களும்  ,   பல துறையை சேர்ந்த பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.  மாணவர்களுடனான கலந்துரையாடலில்      மாணவர்கள்  கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அயராது  சலிப்பில்லாமல்  சந்தோசத்துடன் உற்சாகத்துடன்  கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். 
மீனாட்சி என்ற முதலாண்டு மாணவி அரியலூரில் இருக்கிற படிமங்களில், ஆய்வு தொடங்கப்பட வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

 நடவடிக்கை எடுக்கப்படும் கருத்துக்கள் பாராளுமன்றத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் என்று சொன்ன திருச்சி சிவா சற்று நேரத்திலேயே வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பி அந்த கேள்விக்கு பதிலை  பெற்று உறுதியளித்தார்.

    மாணவர்கள் நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரில் காணவேண்டும் என்று சொன்னபோது அழைத்துச் செல்கிறேன் என்று  உற்சாகப்படுத்தினார்.  மொழி  நாளினை நினைவுகூர்ந்து  மாணவ சமுதாயத்தினரிடம்  எடுத்துச் செல்கின்ற, வரலாற்றுத் துறையின் முயற்சிக்கு   உற்சாகப்படுத்தி பாராட்டினார்.கௌரவ பேராசிரியர்  அருளானந்தின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH