நாம் தமிழர் கட்சி டெல்டாவில் உடைகிறதா? - வழக்கறிஞர் பிரபு பேட்டி

நாம் தமிழர் கட்சி டெல்டாவில் உடைகிறதா? - வழக்கறிஞர் பிரபு பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறினார்கள். இது குறித்து திருச்சி மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, இதுவரை கட்சியை விட்டு பலரை சீமான் நீக்கியுள்ளார். நீக்கியதற்கான காரணத்தை வெள்ளை அறிக்கையாக சீமான் வெளியிட வேண்டும். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அல்லது அவர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் தவறு என்று அரசியல் மேடையில் மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிட அரசியலுக்கும், ஆரிய அரசியளுக்கும் மாற்றாக தமிழ் தேசிய அரசியலை எங்களுக்குள் விதைத்தவர் சீமான். படித்த நாங்கள் அக்கொள்கைகளை ஏற்று அவரது பின்னால் வந்தோம்.

ஆரம்பத்தில் அவரது பேச்சுக்கள் அவரை நேர்மையானவராக காட்டியது. ஆனால் காலம் கடந்து செல்ல செல்ல அவரது உண்மை சுயரூபம் தெரிந்து வந்தது. கட்சி நிர்வாகிகளின் உழைப்பை உறிஞ்சி தின்று தன்னைத்தானே வளர்த்துக் கொண்டார். திராவிட அரசியல் கட்சியினர் செய்யும் தவறுகள் எல்லாம் இப்போது நாம் தமிழர் கட்சியிலும் இருக்கிறது. ஊழல், பாலியல் குற்றச்சாட்டுகள், ஆபாச பேச்சுகள் இப்போது நாம் தமிழர் கட்சியில் இல்லையா? காமராஜரிடம், கக்கனிடம் இருந்த எளிமையான வாழ்க்கை சீமானிடம் இருக்கிறதா? கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதியை சீமான் இழந்து விட்டார்.

தற்போது தமிழ் தேசிய அரசியலுக்கு மாற்று தலைமை தேவைப்படுகிறது. தன்மீது வைக்கப்படும் பாலியல் மற்றும் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்கு சீமான் பதிலளிக்க வேண்டும். நாங்கள் ஒழுக்கமான தலைவரை எதிர்பார்க்கிறோம். சீமானால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்களில் யாராவது ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டை, ஊழல் குற்றச்சாட்டை சீமானால் சொல்ல முடியுமா? நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வேர்வையில் வசூலித்த செல்வத்தை, பொருளாதாரத்தை, விஜயலட்சுமி என்கின்ற பெண்மணிக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கு, ஏழ்மையில் பிச்சை எடுத்து கட்சி நடத்துகிறோம் என்று சொன்ன சீமானுக்கு பணம் எங்கிருந்து வந்தது?

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கார்த்தி என்று என்கின்ற நிர்வாகி பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளானார். அவரை விசாரணைக்கு உட்படுத்தாமல், அவரது குற்றச்செயலை ஊக்கப்படுத்தும் வகையில் பொது மேடைகளில் (Don't worry be happy your elder brother I am advice you)பேசினார். பெண் சமத்துவத்தை பற்றி பேசி விட்டு பெண்களை இழிவு படுத்தும் வகையில் பேசுவது சரியா? கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈழத் தமிழர்களிடம் இருந்து வர வேண்டிய நிதி வராததால், *ஈழத் தமிழர்களது உரிமைகள் பற்றி சீமான் பேசுவதில்லை.

அதேபோல கன்னியாகுமரியில் பாறைகளை வெட்டி கேரளாவுக்கு கடத்திச் செல்லும் மணல் மாஃபியாக்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். அந்த மணல் மாஃபியாக்களிடம் இருந்த சீமானுக்கு வர வேண்டியது வந்த உடன் அவர்களுக்கு எதிராக போராட கட்சியினரை அனுமதிக்காதவர் சீமான் என தஞ்சை நடுவன் மாவட்ட செயலாளர் ஜாபர் பேசினார். நாம் தமிழர் கட்சியின் மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு, ஸ்ரீரங்கம் - மணப்பாறை மாவட்ட செயலாளர் பேரா.முருகேசன், துறையூர் - முசிரி மாவட்ட செயலாளர் நாகராஜ்,

மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் மைக்கெல் ஆரோக்கியராஜ், மாவட்ட வீரத்தமிழர் முண்ணனி மாவட்ட செயலாளர் குப்புசாமி, தஞ்சை நடுவன் மாவட்ட செயலாளர் ஜாபர், பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் தேவராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை இணை செயலாளர் சைமன், சட்டமன்ற லால்குடி தொகுதி துணை செயலாளர் லோகநாதன், திருச்சி தெற்கு மாவட்ட வீரத்தமிழர் முண்ணனி செயலாளர் அருணாச்சலம், இணை செயலாளர் கிருஷ்ணன், சட்டமன்ற திருச்சி கிழக்கு தொகுதி வீரத்தமிழர் முண்ணனி செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision