ஜோசப் கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் பள்ளிகளுக்கு கணினி உபகரணங்கள் வழங்கும் விழா

ஜோசப் கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் பள்ளிகளுக்கு கணினி  உபகரணங்கள் வழங்கும் விழா
செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை – செப்பர்டு, மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி சார்பாக கணினி, கற்றல் உபகரணங்கள் மற்றும் அறைகலன் வழங்கும் நிகழ்ச்சி  திருச்சி மாவட்டம்,குள்ளம் பட்டி   ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்   மற்றும் அளுந்தூர் ஊராட்சி கொட்டப்பட்டு புனித லூர்ட்ஸ் தொடக்கப்பள்ளியிலும்  நடைபெற்றது.

கல்லூரியின் விரிவாக்கத்துறை இயக்குநர் அருட்திரு. பெர்க்மான்ஸ் சே.ச  இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, படிப்பின் முக்கியத்துவதை கதை வாயிலாக எடுத்துக்கூறினார்.
மேலபச்சக்குடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சுப்ரமணி முன்னிலை வகித்தார்.
தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் பெஸ்கி மற்றும் ரோட்டரி அறக்கட்டளை மாவட்டம் 3000 ரொட்டெரியின் தலைவர் கோபால்,  ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டியின்  தலைவர் ரொட்டெரியன் ஆரோக்கியராஜ் மற்றும் பாலாஜி சிறப்பு விருந்தினார்களாக பங்கேற்றார்கள்.

மேலபச்சக்குடி ஊராட்சி துணை தலைவர்  குமார், பொருளியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெயக்குமார் மற்றும் வணிகவியல் துறை பணிமுறை 2 ன் உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெரோம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாணாக்கர்கள் பயன்பெறும் வகையிலும் ,  கணினி பயன்பாட்டை அறிந்து கொள்ளும் வகையிலும் கணினி, கற்றல் உபகரணங்கள் மற்றும் அறைகலன் ஆகியவை இந்நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டன.
குள்ளம்பட்டி  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் முத்து குமாரி, கொட்டப்பட்டு புனித லூர்ட்ஸ் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் அன்னாள் பனிமயம் மற்றும் ஆசிரியர்கள் ராணி, ஆரோக்கிய சுந்தர் பமிலா விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், ஜோசப் கிறிஸ்து ராஜா மற்றும்  பூர்ண விஸ்வநாதன், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

 மூன்றாம் ஆண்டு தழிழாய்வுத்துறை, பொருளியல் மற்றும் வணிகவியல் துறை பணிமுறை 2  மாணாக்கர்கள் ஆகியோர் பள்ளி மாணக்கர்களின் கல்வி நலனுக்காகவும், கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். அரசின் விதி முறைகளுக்கு உட்பட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn