திருச்சியில் பேருந்திலிருந்து பாதியிலேய மாணவர்களை இறக்கி விடுவதால் 3 கி.மீ நடைபயணம் - ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

திருச்சியில் பேருந்திலிருந்து பாதியிலேய மாணவர்களை இறக்கி விடுவதால் 3 கி.மீ  நடைபயணம் - ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சோமரசம்பேட்டை - அல்லித் துறை வழியாக கொய்யாத்தோப்பு வரை வந்து திரும்பி சத்திரம் சென்று விடும் பேருந்தாகும்.இதில் கொய்யாத தோப்பு வியாழன் மேடு, போதாவூர், புலியூர் ,போசம்பட்டி போன்ற பகுதிகளை சார்ந்த பள்ளி மாணக்கர்கள் இதில் பயணம் செல்கின்றனர்.

கொய்யாத்தோப்பு வரை திரும்பி செல்லக்கூடிய பேருந்தை வியாழன் மேடு வரை வருவதற்கு அனுமதித்தால் பள்ளி மாணாக்கர்கள் சிரமமின்றி வந்து செல்வார்கள் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.   பள்ளி மாணக்கர்கள் 3கிலோ மீட்டர்  வரை புத்தகபையுடன் நடந்து வருவதில் மிகவும் சிரமத்திக்குள்ளாகின்றனர்.

வியாழன் மேடு வரை பேருந்தை இயக்க திருச்சி மாவட்ட ஆட்சியர்  போக்குவரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுகோள் வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn