திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் மரங்களை ஏன் வெட்டுகிறீர்கள் என்று பொதுமக்கள் கேள்வி

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் மரங்களை ஏன் வெட்டுகிறீர்கள் என்று பொதுமக்கள் கேள்வி

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பைகளை கோவில் நிர்வாகத்தினர் அகற்றினர். அப்போது ஐந்தாவது பிரகாரத்தில் 30க்கும் மேற்பட்ட 10 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் போன்றவற்றை வெட்டியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கோயில் நிர்வாகம் கூறினாலும் மரங்களை வெட்டுவதை பொதுமக்கள்   எதிர்த்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் கூறுகையில்... ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பது சரியாக இருந்தாலும், அப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டுவதை தான் பொது மக்களாகிய நாங்கள் எதிர்க்கின்றோம். மரங்கள் நமக்கு நன்மை தானே செய்கின்றன. மரங்கள் விட்டு விட்டு பிறவற்றை சுத்தம் செய்வது போன்றவற்றை செய்யலாம். ஆனால் மரங்களை வெட்டுவதை ஒரு குறிக்கோளாக கொண்டு செயல்படுவது போல ஒவ்வொரு பிரகாரத்திலும் இதனை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இம்மரங்களை அகற்றுவதற்கு முறையாக அரசின் எவ்வித அனுமதியும் கோராமல் அவர்களுடைய விருப்பத்தின் பெயரில் செய்துவருகின்றனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போது,  அவர்கள் அலட்சியமாக கோவில் நிர்வாகத்தின் நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்டுகிறோம். ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்கான பணியில் தான் மரங்களையும் சேர்த்து வெட்டி கொண்டு இருக்கிறோம் என்று அலட்சியமாக பதிலளித்தனர் என்றார்.

மேலும் முத்து என்பவர் கூறுகையில்.. கோயில் நிர்வாகத்திடம் இந்த மரங்களை வெட்டுவது குறித்து கேட்ட போது,கோயிலின் மதில்களை இந்த மரங்கள் வளர்ந்தால் பாதிக்கும் என்பதால் வெட்டுவதாக கூறுகின்றனர். மரத்திற்கும் மதில் இருக்கும் இடத்திற்கும் கிட்டத்தட்ட 10 அடி தூரம் இருக்கும். 10 ஆண்டுகள் பழமையான மரங்களை  வெட்டுவது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது கோவில் நிர்வாகம் அலட்சியமாய் பதிலளித்தனர். கோவிலில் உள்ள பூங்காவில் மதுபாட்டில்கள் போன்றவை கிடைக்கின்றன. பூங்காவை தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளாமல் வளர்ந்த மரங்களை வெட்டுவதில் கோவில் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

நேரடியாக அவர்களிடம் பொதுமக்கள் சென்று கேள்வி எழுப்பினாலும் பொதுமக்களுக்கு உரிய பதிலை அவர்கள் அளிப்பதற்கு தயாராக இல்லை. எவ்வித முன் அனுமதி இன்றி மரங்களை வெட்டுகின்றனர் இதுவரை 30க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அவர்களுடைய பணி என்றாலும் மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதே பொது மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக வைக்கின்றோம் என்றார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO